பெண்கள் குறைந்த பட்ச திருமண வயதில் மாற்றம்: பிரதமர்!

அடடே... அப்படியா? இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன்
Screenshot_2020_0815_113746

இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். அதன்பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் அவர்கள் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது நிர்ணயம் தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழாவில் உரையில் பிரதமர் மோடி பேசியதாவது, “பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடை செய்கின்றனர்.

நம் நாட்டை பெருமையடையவும் செய்கின்றனர். பெண்களுக்கு வேலை வாய்ப்பிலும், சுயவேலை வாய்ப்பிலும் சமமான வாய்ப்புகளை வழங்க நம் இந்திய நாடு உறுதி பூண்டுள்ளது. பெண்கள் இன்று நிலக்கரி சுரங்கப்பணிகளிலும், போர் விமானங்களை ஓட்டி வானத்தையும் எட்டி பிடித்து உள்ளனர்.

நமது மகள்களின் (பெண்களின்) குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு ஒன்றை நாம் அமைத்துள்ளோம். அந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது நிர்ணயம் தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும்” என்று பிரதமர் இன்று சுதந்திர தின விழா உரையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.