மேலப்பாளையத்தில் தலைகீழாய் பறந்த தேசியக் கொடி! சதியா? விஎச்பி புகார்!

Published:

national-flag-in-melapalayam
national-flag-in-melapalayam

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மாவட்டச் செயலாளர் ஆறுமுகக்கனி அளித்த புகார் கடிதத்தில்,

74 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் சூழ்நிலையில், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், தேசபக்தர்கள் என அனைவரும் உயிராக நேசிக்கும் தேசியக் கொடியை ஏற்றியும், நெஞ்சில் பதித்தும் கொண்டாடி வருகின்றனர்!

அந்த வகையில் மக்கள் நலனுக்காக செயல்படும் அரசுத் துறையான திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டல் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டு பறக்க விடப்பட்டிருக்கிறது! இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஓர் அரசு அதிகாரிக்கே நம் தேசியக்கொடி பற்றி தெரியாமலும் அக்கறை இல்லாமலும் வேண்டுமென்றே இந்த செயல் நடந்தேறியிருக்கிறது என்று தெரிகிறது!
எனவே இந்த தேசத்துரோக செயல் தேசபக்தர்களின் மனம் மிகவும் வேதனை அடைந்து உள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.. என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img