samai dates role
samai dates role

சாமை பேரிச்சம் ரோல்
தேவையான பொருட்கள்

1கப் சாமை மாவு
10பேரீச்சம் பழம்
1 கப் நாட்டுச்சக்கரை
1 கப் நெய்யில் வருத்த தேங்காய் துருவல்
சிறிது உப்பு

செய்முறை

பேரீச்சையில் உள்ள விதைகளை நீக்கி வேக வைத்து ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அதனை வாணலியில் போட்டு, அதனுடன் நாட்டுச்சக்கரை, வருத்த தேங்காய் துருவல், நெய் சேர் வதக்கி பூரணமாக செய்து கொள்ளவும்.

அகலமான பத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் சாமை மாவை சேர்த்து கைவிடாமல் கிளறவும்

சப்பாத்திமாவு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கவும்.
கை பொறுக்கும் அளவு சூடு இருக்கும்போதே மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

பின்னர் சப்பாத்திப் போல் வட்டமாக சற்று கனமாக திரட்டு அல்லது தட்டிக் கொள்ளவும்.

அதன் நடுவில் கொஞ்சம் பூரண கலவையை வைத்து ரோல் செய்து, இட்லி பத்திரத்தில் பரப்பவும்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

பின் ஆவியில் பத்து நிமிடம் வேகவைத்து எடுத்து, சிறு சிறு வட்டங்களாக வெட்டி பரிமாறவும். சுவையான சத்தான சாமை பேரிச்சை ரோல் தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending