
டோக்கியோ ஒலிம்பிக் இன்றைய (05.08.2021) போட்டி முடிவுகள்
மல்யுத்த வீரர் ரவிக்குமார் தஹியா ரஷ்யாவின் சவூர் உகுவேவை எதிர்த்து ஆண்கள் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் போட்டியில் தொல்வியுற்றார். அதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
மல்யுத்த வீரர் தீபக் புனியாவுக்கு சான் மரினோவின் மைல்ஸ் அமினேவுக்கு எதிரான ஆடவர் ஃப்ரீஸ்டைல் 86 கிலோ போட்டியில் தோவியுற்று தனது வெண்கலப் பதக்க வாய்ப்பை இழந்தார். தீபக் கடைசி 10 வினாடிகளில் போட்டியை இழந்தார். இல்லையெனில் கூட அவர் தனது எதிராளியை எதிர்த்து 4-5 க்கு பின்னால் இருந்தார்.
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கத்தை வென்றது, வரலாற்றை மீண்டும் எழுதியது, மிகவும் விறுவிறுப்பான ஆட்டம் காண்போரை மிகப் பதட்டத்தில் நாற்காலி நுனிக்கு கொண்டு வந்தது. போட்டியில் ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
கடைசி மூன்று நிமிடங்கள் மைதானத்தில் மிகவும் பதட்டமாக இருந்தது. அப்போது இந்தியா 5-4 என முன்னிலையில் இருந்தது. ஆனால் ஆட்டம் முடிவதற்கு ஆறு வினாடிகளுக்கு முன்பு ஜெர்மனிக்கு ஒரு பெனால்டி கார்னர் வழங்கப்பட்டது. ஆனால் இந்திய கோல் காப்பாளர் ஸ்ரீஜேஷ் பெனால்டி ஸ்ட்ரோக்கைத் தடுத்தார். இதனால் இந்தியா 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பதக்கத்தை, வெண்கலப் பதக்கத்தை வென்றது.
53 கிலோ காலிறுதி மல்யுத்தப் போட்டியில் பெலாரஸின் வனேசா கலாட்ஜின்ஸ்காயாவினால் வினேஷ் போகட் தோல்வியை சந்தித்தார். போகட் (தங்கல் திரைப்படம் இந்த போகட் சகோதரிகளின் வாழ்க்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பார்கள்) பதக்கம் பெறக்கூடியவராகக் கருதப்பட்டார். எனவே அவரது தோல்வி ஏமாற்றம் அளித்தது.
இளம் அன்ஷு மாலிக் ரஷ்யாவின் வலேரியா கோப்லோவாவிடம் 1-5 என்ற கணக்கில் தனது மறுசுழற்சி மல்யுத்தப் போட்டியை இழந்து 57 கிலோ போட்டியில் இருந்து விலகினார்.
பெண் கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் இரண்டாவது சுற்றுக்கு பிறகு இரண்டாவது இடத்தில் (ஆனால் மற்ற இரண்டு வீரர்களுடன்) உள்ளார். இப்போது அவர் மற்றொரு பதக்கத்திற்கான மற்றொரு நம்பிக்கை அளிப்பவராக உள்ளார். மற்ற கோல்ப் வீராங்கனை தீக்ஷா தாகர் 53ஆவது இடத்தில் உள்ளார்.