மனைவியின் புகைப்படத்தையும், செல்போன் எண்ணையும் இணையத்தில் பதிவிட்ட நபர்! கணவன் புகார்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
cell phone

சென்னையை சேர்ந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மொபைல் நம்பருடன் லோக்காண்டோ இணையதளத்தில் பதிவேற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண்ணை ஆபாசமாக சித்தரித்து அந்த பெண்ணின் மொபைல் நம்பரையும் லோக்காண்டோ என்ற இணையதளத்தில் பதிவிட்டதாக அந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடர்ந்தனர்.

விசாரணையில் லோக்காண்டோ இணையத்தை தொடர்பு கொண்டு அந்த படத்தை பதிவேற்றியவர் குறித்த விவரங்கள் பெறப்பட்டது. தகவலின் பேரில் சென்னை தரமணியை சேர்ந்த சூரியநாராயணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.