முகநூலில் பெண்ணின் இதய சிகிச்சைக்கு உதவி கேட்டு பதிவு! விரைந்து உதவிய முதல்வர்! யோகிக்கு குவியும் பாராட்டு!

அடடே... அப்படியா? இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
yogiathi

மருத்துவ செலவிற்கு வழியின்றி தவித்த பெண்ணின், இதய சிகிச்சைக்கு நிதி ஒதுக்கியதோடு, தனிப்பட்ட முறையில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து சொன்ன உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செயல் பாராட்டுப் பெற்றுள்ளது.

சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு பதிவு வைரலானது. அதில் உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டம், கேம்பியர்கஞ்ச் தாலுகாவில் உள்ள மச்லிகான் கிராமத்தில் வசித்து வரும், ஏழை விவசாயி ராகேஷ் சந்திர மிஸ்ராவின் மகள் மதுலிகா மிஸ்ரா இதய சிகிச்சைக்கு வழியின்றி தவிப்பதாக கூறப்பட்டிருந்தது.

மேலும், தற்போது பி.எட் பயின்று வரும் மதுலிகாவிற்கு இதயத்தில் உள்ள வால்வில் பிரச்சனை இருப்பதாகவும், அதனை அறுவை சிகிச்சை மூலம் மாற்ற வேண்டுமானால் பெரும்பணம் செலவாகும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இது குறித்த தகவல் சமூகவலை தளங்களில் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காதுகளையும் எட்டியுள்ளது.

இதனை தொடர்ந்து, சமூகவலைத் தளத்தில் வந்த கோரிக்கையின் அடிப்படையில், அதன் உண்மை தன்மை ஆராயப்பட்டு, உறுதி செய்யபட்ட நிலையில், கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் யோகி, முதல்வர் தொகுப்பு நிதியில் இருந்து மதுலிகாவின் சிகிச்சைக்கு ரூ. 9.90 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தாவு பிறப்பித்துள்ளார்.

வெறும் நிதி ஒதுக்கியதோடு மட்டும் நின்றுவிடாமல், மதுலிகா விரைவில் குணம் பெறவும் ராகேஷ் சந்திர மிஸ்ராவிற்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.