யூனிபார்மோடு காவலர் செய்த வேலை! வீடியோ எடுத்த இளைஞரை சுட்டுக்கொன்ற காவலர்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
wine

தில்லியில் கடந்த வியாழக்கிழமையன்று 47 வயதான சுரேந்தர் என்ற ஒரு தலைமை போலீஸ்காரர், இரவு டூட்டி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார் . அப்போது அவருக்கு மது அருந்தும் எண்ணம் திடீரென தோன்றவே , போகும் வழியிலிருந்த ஒரு ஒயின் ஷாப்புக்குள் போனார் .

அப்போது அவர் அங்கு மது அருந்திக் கொண்டிரும்போது, அங்கு வந்த கெஹ்லாவத் என்பவரும் இணைந்து அருந்தியுள்ளார் .

இருவரும் அருந்தும்போது அந்த இளைஞர் சீருடையில் மது அருந்தும் அந்த போலீசை படமெடுத்தார் .இதனால் கோபமான அந்த போலீஸ் அவரிடம் இந்த நிலையில் என்னை படமெடுக்காதே என்று கூறினார்.

ஆனால் அந்த இளைஞர் கேட்காமல் அவரை வீடியோ எடுத்தார். இதனால் கடுப்பான போலீஸ் குடிபோதையில் அவரிடமிருந்த துப்பாக்கியை எடுத்து ஒரு சுட்டார் .

அவரின் துப்பாக்கி குண்டு இளைஞரின் நெஞ்சில் பாய்ந்ததில் அங்கேயே மயங்கி விழுந்தார் .பிறகு அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே இறந்தார் .

இதனால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்த போலீஸ் உயர்அதிகாரிகள் , துப்பாக்கியால் சுட்ட அந்த போலீஸ் சுரேந்தரின் துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.