புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பகுதியில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

உள்ளூர் செய்திகள் திருச்சி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சமூக இடைவெளியுடன் கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக கொண்டாடப்பட்டது ஆவுடையார்கோயில் பகுதியில் குளத்துகுடியிருப்பு கிராமத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட நிலையில் புத்தாம்பூர்,மீமிசல்,வடக்கு மணமேல்குடி,புதுக்குடி ஆகிய ஊர்களில் இந்து முன்னணி சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது

இந்து முன்னணி மாவட்ட பொதுசெயலாளர் நாகராஜன் தலைமையில் ஆங்காங்கே சிலைகள் வைக்கப்பட்டு அரசு உத்தரவுப்படி விதிமுறைகள்படி கூட்டமின்றி ஒலிபெருக்கி மற்றும் மேளதாளமின்றி வாகனமின்றி விழா நடந்தது.வடக்கு மணமேல்குடி பகுதியில் பரணிதரன்,முத்துகுமார்,ஸ்டாலின்,பிரகாஷ்,சந்தோஷ் ஆகியோரும்,ஆர்புதுாரில் பூபதி,சின்னதம்பி,காமராஜ்,லட்சுமணன்,ஆகியோரும் புத்தாம்பூரில் முன்னாள் பாஜக ஒன்றிய தலைவர் சேகர்,காளிதாஸ்,ராஜா,சுப்பு காவஸ்கி ஆகியோரும் மற்றும் விஜர்சன விழாக்கமிட்டியாளர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

23-08-20-vinayagar
23-08-20-vinayagar

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.