
திருப்போரூர் கந்தசாமி கோவில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோவில் மற்றும் ஆளவந்தார் கோவில்களுக்கு சொந்தமான 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருப்போரூர் கோவிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பாதுகாக்கக் கோரி வழக்கறிஞர் ஜெகன்நாத் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மறுஉத்தரவு வரும் வரை இவ்விரு கோவில் சொத்துக்களையும் யாருக்கும் பத்திரப் பதிவு செய்யக்கூடாது என திருப்போரூர் சார்பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.
தமிழக அரசும், இந்து சமய அறநிலைத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
முன்னதாக, இந்த கோயில் சொத்துகளை கபளீகரம் செய்யவும், முறைகேடாக கையகப் படுத்திக் கொள்ளவும் சிலர் முயன்றதும், அண்மையில் துப்பாக்கிச் சூடும் இது தொடர்பில் நடந்ததும் குறிப்பிடத் தக்கது.
Posts by Dhinasari Reporter:
- அமிர்தா வேளாண் கல்லூரி சார்பில் நீர்வடிப் பகுதி மற்றும் வறட்சி மேலாண்மை விழிப்பு உணர்வு நிகழ்ச்சி!
- செந்தூரில் முதல்வருக்கும் அமைச்சருக்கும் அரோஹரா போட்ட வர்ணனையாளர் மீது புகார்!
- நெல்லை – கொல்லம் பகல் நேர ரயில்கள் இயக்க பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை!
- மதுரை நகைக்கடை கொள்ளைச் சம்பவம்; மாட்டிய யூட்யூபர், இன்ஸ்டா பிரபலங்கள்!
- திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!


