spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்சுவாமி விவேகானந்தரின் கும்பகோண விஜய விழா! நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் பங்கேற்று வீர உரை!

சுவாமி விவேகானந்தரின் கும்பகோண விஜய விழா! நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் பங்கேற்று வீர உரை!

- Advertisement -
ramakrishna mutt prog tanjore

சுவாமி விவேகானந்தரின் கும்பகோண விஜய விழா 5.2.24 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

இதே தினத்தில் 127 ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்திற்கு வந்து அருளுரையும் வீரகர்ஜனையும் புரிந்தார். அந்த அருளையும் வீரத்தையும் மக்கள் மத்தியில் விதைக்க இன்று அவர் அருளிய அதே போர்ட்டர் ஹாலில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாகாலாந்து ஆளுநர் மேதகு இல. கணேசன் சிறப்புரை நிகழ்த்தினார். மக்கள் திரளாக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் ஐயா சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.


”தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை புனித நகரமாக அறிவித்து, புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும்,” என நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் பேசினார்.

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் மற்றும் கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்தா டிரஸ்ட் சார்பில், சுவாமி விவேகானந்தரின் 127ம் ஆண்டு கும்பகோணம் விஜய விழா நேற்று நடைபெற்றது. இதில், நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் பங்கேற்று, விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:

சுவாமி விவேகானந்தர் பேசிய இடத்தில் நின்று பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது பெருமைக்குரிய விஷயம். மனிதனுக்கு என்று இயல்பு உள்ளது. அது இல்லாவிட்டால் அவர்கள் மிருகங்களுக்குச் சமம். அடுத்தவர் கஷ்டத்தைப் பார்த்து, அவருக்கு வேண்டியதைத் தானாக முன் வந்து கொடுப்பது தான் இயல்பாகும். இந்த குணம் இருந்தால் தான் மனிதன்.

இந்த மனிதனை உருவாக்க வேண்டும் என்று விவேகானந்தர் கூறினார். இதை போல சுவாமி விவேகானந்தர், பாரத நாடு உலக அரங்கத்தில் உயர வேண்டும் என கனவு கண்டார்; அந்த கனவு இன்னும் பூர்த்தியாகவில்லை.

இதனால் மாணவர்கள் எடுக்கக்கூடிய பொறுப்பு என்னவென்றால், விவேகானந்தர் கண்ட கனவை நினைவாக்கும் வகையில், நம் நாடு மேலோங்கிய தேசமாக வேண்டும் என்பதாக தான் இருக்க வேண்டும். இதை தான் பிரதமர் மோடியும் தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி சொன்னது போல, தற்போது அமிர்த காலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100வது ஆண்டு வரும் போது, தேசத்திற்கு பொற்காலம். மேலும், உலக அரங்கில் இந்தியா உயர்ந்திருக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் ஆசை.

தமிழகத்தில், கும்பகோணத்திற்கு சிறப்பு என்னவென்றால் ஊரே கோவிலாக உள்ளது. எனவே, தான் கோவில் மாநகரமான இதை, புனித நகரம் என்கிறோம். புராதனமான இந்த நகரத்தை புனித நகரமாக யார் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளா விட்டாலும், புராதன நகரம் தான். இதை புனித நகரமாக, அரசு அறிவித்து புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும். – என்று பேசினார்.

விழாவில், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குனர் காமகோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுவாமி விவேகானந்தரின் கும்பகோண விஜய விழா கோவிந்தபுரம் விட்டல்தாஸ் மகராஜ் அவர்களின் நாம சங்கீர்த்தனத்துடன் நிறைவு பெற்றது. பிப்ரவரி 5-ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்தில் இருந்து ரயில் பயணமாக சென்னைக்குச் சென்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், அவரை மானசீகமாக வழியனுப்பி வைத்த உணர்வைப் பெற்றார்கள்.

இதனிடையே, இன்று முதல் சென்னையில் விவேகானந்தர் தங்கியிருந்த தினங்களைக் கொண்டாடும் விதமாக, விவேகானந்த நவராத்திரி விழா தொடங்கியிருக்கிறது.


Swami Vivekananda’s Kumbakonam Digvijaya Festival – 5.2.24
On this same day 127 years ago, Swami Vivekananda visited Kumbakonam and delivered a wonderful lecture. To instill that grace and valor among the people, a special program was organized at the same Porter Town Hall where Swamiji graced on 5.2.1897. Nagaland Governor His Excellency Sri. Ganesanji delivered the keynote speech.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe