உத்தமனே நீ உறங்கு

கவிதைகள் லைஃப் ஸ்டைல்
gopalji-pooja
gopalji-pooja

உத்தமனே நீ உறங்கு

விழுந்து விருட்சமாக
விதையல்ல நீ
அதற்கும் மேல் – ஆம்
எழுந்து உருவாக்கிய
இந்து முன்னணி எனும்
நந்தவனமே காட்சி

மக்கி மண்ணை வளப்படுத்த
உரமல்ல நீ
அதற்கும் மேல் – ஆம்
மானத்தோடு எழுந்துள்ள
இந்து சமூகமே சாட்சி

நெறியோடு வாழ்ந்த
ராமனும் நீ
குருசேத்திர வெற்றி கண்ட
கோபாலன் நீ

எரிமலையாய் வெடிப்பாய்
எதிரிகள் நடுங்க
குழந்தையாய் பேசி
குதுகலமாய் சிரிப்பாய்
கூட உள்ளோர் மகிழ

தேசியம் வளர்த்து
தெய்வீகம் காத்து
ஓடோடி குரல் கொடுத்து
உதிரமெல்லாம் உணர்வூட்டி
சக்கர நாற்காலியோடும்
சரித்திரம் எழுதினாய்

கட்டாய ஒய்வளித்து
இறைவன் கட்டாந்தரையில்
உறங்க வைத்துள்ளான்

இளைப்பாறு களைப்பாறு
உன் பணி நாம் முடிப்போம்
உத்தமனே நீ உறங்கு !

  • வேணுவனத்தான் –
venuvanathan-kavithai
venuvanathan-kavithai

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.