+2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்!

கல்வி சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
exam
exam

பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று ஜூலை 24 முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 16-ஆம் தேதி வெளியிடப்பட்டன மொத்தம் 7.9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் ஜூலை 30ம் தேதி வரை தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மதிப்பெண் சான்றிதழை பிளஸ் டூ மாணவர்கள் ஜூலை 30ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை.

தங்கள் பகுதியில் கொரோனா தொற்று சூழல் சரியான பின்பும் பள்ளிகளுக்குச் சென்று சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர்களின் கவனத்திற்கு ஒரு முக்கியமான செய்தி:-

ஆன்லைன் மூலமாக அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் இதர கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்யும்போது சில கல்லூரிகளில் நன்நடத்தை சான்றிதழ் (conduct certificate), 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை கேட்கப்படுகிறது.

பள்ளிகளுக்கு இன்று செல்ல கூடிய மாணவர்கள் அவற்றை கேட்டு வாங்குங்கள். மேலும் சில கல்லூரிகளில் விண்ணப்ப படிவத்தில் நன்னடத்தை சான்றிதழை அப்லோட் செய்ய கேட்கப்பட்டுள்ளது. ஆகவே அதையும் கேட்டு இன்று வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.