அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சுப்ரமணியபுரம் கிராமத்தில் மர்ம
காய்ச்சலுக்கு கொத்தனார் பலியானார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சுப்ரமணியபுரம் கிராமம் உள்ளது இந்த
கிராமத்தில் கொத்தனாராக வேலைபார்த்து வந்தவர் செந்தில்(32)
இவருக்கு நேற்று காலை அதிகமான காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டது பின்னர் உறவினர்கள்
அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேலும் கூடுதலான காய்ச்சல்
தாக்கம் இருந்ததால் அறந்தாங்கி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அவர் சேர்த்த சில மணி நேரத்தில் இறந்தார்.இறந்த அவருக்கு வசந்தி என்ற
மனைவியும் மணிகண்டன் என்ற மகனும் மணிமேகலை என்ற மகளும் உள்ளனர்.
அறந்தாங்கி ஆவுடையார்கோயில் மணமேல்குடி பகுதியில் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக
உள்ள நிலையில் சுப்ரமணியபுரம் கிராமத்தில் காய்ச்சல் தாக்கத்தால் செந்தில்
இறந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.




