பெங்களூர்:
கர்நாடக முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர். கர்நாடக முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த், காபி டே நிறுவனத்தின் தலைவர். இவருக்குச் சொந்தமாக பெங்களூரில் உள்ள வீட்டு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சித்தார்த் மீதான வரி ஏய்ப்புப் புகார் தொடர்பாக, இந்த சோதனை நடத்தப்படுகிறது. பெங்களூரு, சென்னை உள்ளிட்ட இருபது இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அண்மையில், கர்நாடக மின்துறை அமைச்சர் சிவக்குமாரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது, கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் சிக்கியது குறிப்பிடத் தக்கது.



