அக்.05; தமிழகத்தில் இன்று… 5395 பேருக்கு கொரோனா; 62 பேர் உயிரிழப்பு!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்
corona-image
corona-image

தமிழகத்தில் இன்று மேலும் 5395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.  கொரோனா தாக்கத்தால் ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர்… என்று சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 5395 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு, 6,25,391 ஆக உயர்வு கண்டுள்ளது.

சென்னையில் இன்று 1367 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,74,143 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து , தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 9,846 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5572 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு, குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 5,69,664 ஆக அதிகரித்துள்ளது. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

district-wise-covid-affected-details-oct-5
district-wise-covid-affected-details-oct-5

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.