சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா லைஃப் ஸ்டைல்
SABARIMALAI NADI
SABARIMALAI NADI

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும், 1,000 பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.

இதற்கான முன்பதிவு, நவ., 1ம் தேதி துவங்கிய சில மணி நேரத்தில், 60 நாட்களுக்கும் முடிந்து விட்டது. குறைவான பக்தர்கள் வருகையால் சபரிமலை களைகட்டவில்லை.

சபரிமலைக்கு தற்போது வரும் அழைப்புகளில் பெரும்பாலும், தரிசன முன்பதிவு தொடர்பாகவே வருகின்றன. ‘ஆன்லைன் முன்பதிவு மீண்டும் எப்போது துவங்கும். மாலை போட்டு வந்தால் திருப்பி அனுப்பவீர்களா’ என, கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர்.

இந்நிலையில், நவ., 23 அல்லது 24ல், முன்பதிவு மீண்டும் துவங்க உள்ளதாகவும், தினமும், 2,000 – 5,000 வரை பக்தர்களை அனுமதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.