விஜய் படத்தில் நடிக்க மறுத்த ஓவியா

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்

விஜய் படத்தில் நடிக்க மறுத்துள்ளார் ஓவியா. காரணம் என்ன தெரியுமா ?

காரணம் விஜய் 62 படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்க ஓவியாவை கேட்க… அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க… கடைசியில் ஜூலி தங்கையாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய 3வது முறையாக விஜய் 62 படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதை தயாரிக்கிறது.

இதில் முக்கிய வேடத்தில் நடிக்க பிக்பாஸ் புகழ் ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள எந்தப் படமும் இதுவரை வெளிவரவில்லை. பல படங்களை சம்பளம் தொடர்பாக நிராகரித்துள்ளார் ஓவியா.

இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் ஓவியாவை நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், நடித்தால் ஹீரோயின் என்று சொல்லி அந்த வாய்ப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவருக்குப் பதிலாக ஜூலி நடிக்க இருப்பதாக குறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.