வீட்டு கடன் பெறுவோருக்கு அதிரடி ஆஃபர்! SBI!

அடடே... அப்படியா? சற்றுமுன் வணிகம்
SBI
SBI

வீட்டுக்கடன் வாங்குவோருக்கு பிராஸசிங் கட்டணம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் 6.8 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைந்த வட்டி விகிதம். பிராஸசிங் கட்டணம் ரத்து மார்ச் மாதம் வரை மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வீட்டுக்கடன் பிரிவில் 5 லட்சம் கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் பெற்றுள்ள எஸ்பிஐ அதனை மேலும் பெருக்கும் விதமாக அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது.

எஸ்பிஐ கடன் சேவை பிரிவில் 34% வர்த்தகத்துடன் இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் வங்கியாக உள்ளது.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 1000 பேருக்கு கடன் அளிக்கும் வகையில் எஸ்பிஐ செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் எஸ்பிஐ வீட்டுக்கடன் பிரிவில் 5 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.