மாம்பழம் திருட வந்த சிறுவர்களை கட்டி வைத்து அடித்த தோட்டக் காவலாளிகள்!

இந்தியா சற்றுமுன்
telungana 1 - 2026

தோட்டத்திற்குள் மாம்பழம் பறிக்க சென்றதாக கூறி இரண்டு சிறுவர்களை கட்டிவைத்து மாட்டு சாணத்தை வாயில் திணித்து சித்திரவதை செய்த தோட்ட காவலாளிகள்.

telungana 2 - 2026

தெலங்கானாவில் மகாபுபாபாத் மாவட்டத்தில் மாம்பழம் பறிக்க தோட்ட உரிமையாளருக்கு தெரியாமல் தோட்டத்திற்குள் நுழைந்த சிறுவர்களை அத்தோட்டத்தின் பாதுகாவலர்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்தது மட்டுமின்றி மாட்டு சாணத்தையும் சாப்பிடுமாறு அவர்களை துன்புறுத்தியுள்ளனர். எங்களை விட்டுவிடுங்கள் என சிறுவர்கள் கதறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

telungana - 2026

மேலும் சிறுவர்கள் தாங்கள் வளர்த்த செல்லப்பிராணியைத் தேடியே தோட்டத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த சிறுவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

mango - 2026

இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் தோட்ட பாதுகாவலர்கள் பாந்து யக்கு மற்றும் பாந்து ராமுலு ஆகிய இருவரும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.