42 பேருக்கு கலைமாமணி விருது!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
Saroja-devi
Saroja-devi

தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வருடந்தோறும் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திரைத்துறையில், சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, செளகார் ஜானகி உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

sowkar-janaki
sowkar-janaki

நடிகைகள் சரோஜாதேவி, செளகார் ஜானகி, சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

sujadha
sujadha

இவர்களுடன் இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா ஆகியோருக்கும், பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

dheena-1
dheena-1

மேலும் தயாரிப்பாளர்களில் கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

devadharshni
devadharshni

கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா, நடிகர் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ், நித்யா, ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ்,

shanthi
shanthi

நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகோடியன், காதல் மதி, வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

sivakarthikeyan2
sivakarthikeyan2

பழம்பெரும் நடிகைகளான சரோஜா தேவி, செளகார் ஜானகி ஆகியோருக்கு இத்தனை வருடங்களாக கலைமாமணி விருது வழங்கப்படாதது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

sankitha
sankitha

முன்னதாக நடிகைகள் த்ரிஷா, நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா ஆகியோர் கலைமாமணி விருது பெற்றுள்ளனர். இவர்களை விடவா, நடிகைகள் சரோஜா தேவி, செளகார் ஜானகி ஆகியோர் இத்தனை வருடங்களாக சாதனைகளைப் படைக்காமல் இருந்தனர் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.