உறங்கும் நாயை வீட்டுக்குள் புகுந்து தூக்கிய சிறுத்தை!

சற்றுமுன் தமிழகம்
Black leopard - 2026

நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே உள்ள எமகுன்டு காலணி பகுதியில் கருஞ்சிறுத்தை நாயை கவ்வி கொண்டு செல்லும் காட்சி பதை பதைப்பான Cctv காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே உள்ள எமகுண்டு காலனியில் வீட்டில் உள்ள நாயை கருஞ்சிறுத்தை தூக்கி செல்லும் காட்சி Cctv கேமராவில் மெதுவாக குடியிருப்பு பகுதியில் நுழையும் கருஞ்சிறுத்தை வீட்டின் முன் உறங்கும் நாயை கண்ணிமைக்கும் நேரத்தில் கவ்வி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த ஆடுகள் சிறுத்தைக்கு பலியாகின.

தொடர்ந்து இப்பகுததியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் குன்னுார் வனசரகர் சசிகுமார் தலைமையில் எமகுண்டு பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்கு பின்பு கருஞ்சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தானியிங்கி கண்காணிப்பு நவீன கேமராக்கள் பொருத்த வனத்துறையினர்கள் திட்டமிட்டுள்ளனர். கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.