பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தோல்வியுற்றதால் முதலாளி மனைவியை கொன்ற இளைஞன்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
vankodumar - 2026

தன்னுடைய கடை முதலாளியின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்று தோற்றதால், அவரை கொலை செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் தானேவின் டோம்பிவலியில் ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து ஒரு -டிபார்ட்மெண்டல் ஸ்டோரை நடத்துகிறார். அந்த கடையில் ரஞ்சன் என்ற 20 வயதான இளைஞர் ஒருவர் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் அந்த ரஞ்சனுக்கு அந்த கடை முதலாளியின் மனைவி மீது ஒரு கண். அதனால் ரஞ்சன் அவரை அடைய சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அந்த கடை முதலாளியும் அவரின் மனைவியும் மது அருந்தி கொண்டிருந்தார்கள். அதன் பிறகு அந்த முதலாளி மது போதை அதிகமாகி வெளியே சென்று விட்டார்.

அப்போது அவரின் மனைவி மட்டும் மது போதையில் தள்ளாடியபடி தனியே இருந்துள்ளார். அப்போது அதை கவனித்த அந்த கடை ஊழியர் ரஞ்சன் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதனால் திடுக்கிட்ட அந்த பெண் அவரை தடுத்து விட்டு, தன்னுடைய கணவரிடம் இதை தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதனால் அந்த ரஞ்சன் தன்னை அந்த பெண் காட்டிக்கொடுத்துவிடுவார் என்று பயந்து அவரை அங்கேயே அடித்து கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர் அங்கு வந்த அவரது முதலாளி, அவரது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டு அவரின் மனைவியை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

அதன் பிறகு இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் தெரிந்து இந்த கொலையை செய்த ரஞ்சனை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.