வேகமாக வந்த கார் வாகனங்கள் மீது மோதி விபத்து.. ஐவர் பலி..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாந்த்ரா-வொர்லி சீ லிங்க் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டது.

நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஒரு ஆம்புலன்ஸ் நின்றுகொண்டிருந்தது.

இன்று அந்த சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று அந்த ஆம்புலன்ஸ் மற்றும் அருகில் நின்றிருந்த கார்களில் மோதி மீண்டும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.  இந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் சீ லிங்க் ஊழியர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதில் சிகிச்சையின்போது 5 பேர் உயிரிழந்ததாகவும் காயமடைந்த 8 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

500x300 1772170 accident - 2026
ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Related articles

Recent articles

spot_img