ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் வரை பலியாகியுள்ள நிலையில், துப்பாக்கி சூடு நடத்த மேலிடத்தில் இருந்து உத்தரவிட்டது யார்? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், மக்கள் வாழும் பகுதியை மாசுபடுத்திக்கொண்டு இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.
மேலிடத்தில் இருந்து உத்தரவு வராமல் இத்தகைய துப்பாக்கிச்சூடு நடக்க வாய்ப்பு இல்லை. இந்த சம்பவத்திற்கு அதிகாரிகளை மட்டுமே பழிவாங்கிவிட கூடாது.
மேலிடத்தில் இருந்து உத்தரவிட்டது யார்? என்பதே தமிழகத்தின் கேள்வி. அரசு வன்முறையும் கண்டிக்கத்தக்கதே. பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரச்சனைகளுக்கு ரத்தத்தில் முற்றுப்புள்ளி வைக்க கூடாது என்றார்.





FIRST REPLY TO THE POINT WHO WERE INSTIGATING THE CROWD TO PELT STONES AT THE POLICE ?? WHY SHOULD THE POLICE NOT FIRE AND LATHI CHARGE THE BARBARIC CROWD WHEN THEY FELT THAT THEIR LIVES WERE AT STAKE. MANY CONCESSIONS WERE ANNONCED TO ONLY THE RIOTERS.
SHORTLY ANOTHER MOVEMENT MAY COME UP IN A LARGER SCALE TOWARDS 2019. IT WILL BE LOOT INDIA.
Answer to the old man Kamaal(?)’s question: it doesn’t matter who ordered but the dire necessity prompted the correct order.