ஆரோக்கிய சமையல்: பாலக்கீரை குழிப்பணியாரம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
kuzhi paniyaram - 2026

பாலக்கீரை குழிப்பணியாரம்
தேவையான பொருட்கள்
இட்லிமாவு – ஒரு கப்
பாலக் கீரை – அரை கட்டு
தாளிக்க:
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
முந்திரி – 6 (பொடியாக நருக்கி கொள்ளவும்)
வெங்காயம் – ஒன்று
பச்சைமிளகாய் – இரண்டு
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை
இட்லி மாவு ரெடி பண்ணிக் கொள்ளவும். பாலக் கீரையை பொடியாக நறுக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து முந்திரி சேர்த்து வறுத்து வெங்காயம் பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அடுத்து பாலக் கீரை சேர்த்து வதக்கி சிறிது தேவைக்கு உப்பு போட்டு 5 நிமிடம் வேக விடவும்.

தாளித்த கலவையை இட்லி மாவில் சேர்த்து கலக்கவும்.

குழிப்பணியார சட்டியை காய வைத்து சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றி, தீயின் தனலை சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் விட்டு வேக விடவும்.

சுவையான பாலக் குழிப்பணியாரம் ரெடி. கொத்தமல்லி துவையலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.