மச்சம் சொல்லும் மிச்சம்: இன்பம் மீது நாட்டம்..

Published:

mole 1 - 2026

மேல் மற்றும் கீழ் உதடுகள் – இவர்கள் ஒழுக்கம் மற்றும் உயர்ந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மேல் வாய் பகுதி – இவர்களுக்கு அமைதி மற்றும் அன்பான கணவர் அமைவார்.

உதடுகளில் மச்சம்
உதடுகளில் உள்ள மச்சம் பெருஞ்செல்வத்தைக் குறிக்கும். தாராள பணப்புழக்கம் இருக்கும். சரஸ்வதி தேவியின் கடாட்சம் கிட்டும்.

கல்வியில் உயர்ந்த நிலையை எளிதில் அடைவார்கள். கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை போன்ற ஏதாவது ஒன்றில் பெரும்புகழை இவர்கள் எய்தக்கூடும். கட்டுப்பாடில்லாமல் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இவர்களிடம் இருக்கும்.

முகவாயில் மச்சம்
நல்ல அம்சமாகும். பெண்ணாக இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார். ஜோதிடம், வைத்தியம் போன்றவற்றில் கைதேர்ந்தவர்கள். உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும். குடும்பவாழ்வு திருப்திகரமாக இருக்கும்.

வளரும்……

Related articles

Recent articles

spot_img