ஏசியை எடுத்து செல்லும் போது வெடித்து விபரீதம்!

இந்தியா
bike - 2026

பைக்கில் எடுத்து செல்லப்பட்ட ஏர்கண்டிஷன் உபகரணத்தின் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏர்கண்டிஷன் உபகரணம் ஒன்றை இருசக்கர வாகனத்தில் வைத்து இரண்டு பேர் எடுத்து சென்று கொண்டிருந்தனர். ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள போவன்பள்ளியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று ஏர் கண்டிஷன் உபகரணத்தின் சிலிண்டர் வெடித்து இரண்டு பேரும் பைக்கில் இருந்து சுமார் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பைக்கை ஓட்டி சென்ற நபர் படுகாயமடைந்து பரிதாபமாக மரணமடைந்தார். பைக்கின் பின் பகுதியில் உட்கார்ந்து ஏர் கண்டிஷன் உபகரணத்தை பிடித்து சென்று கொண்டிருந்த நபர் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் போவன்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வெளியான சிசிடிவி காட்சிகள் தற்போது காண்போரை பதை பதைக்க வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.