சபரிமலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ஓர் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது புனிதமாகப் போற்றப்படும் பதினெட்டாம்படி க்கு அருகில் உள்ள ஆலமரத்தில் இன்று மதியம் உச்சிவேளையில் தீப்பிடித்தது
சபரிமலையில் இதுவரை இல்லாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன இதன் வெளிப்பாடாகத்தான் பச்சை ஆலமரத்தின் இலையில் தீப்பற்றி உள்ளது இது அசம்பாவிதத்தின் வெளிப்பாடு என்று ஐயப்பனின் பக்தர்கள் கதறுகின்றனர்
பச்சை ஆலமரத்தில் தீப்பற்றி அதை அவ்வளவு லேசாக பக்தர்கள் எடுத்துக்கொள்ளவில்லை சபரிமலையில் எல்லா வயது பெண்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் கடந்த சில நாள்களாக கம்யூனிஸ்டு பெண்கள் சபரிமலைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர்
இது மிகப்பெரிய கலவரத்தை கேரளத்தில் ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் சபரிமலை ஐயப்பனின் பக்தர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில் இன்றும் நாளையும் அவர்கள் தரிசனத்துக்காக காத்து இருக்கின்றனர் இந்த நிலையில் இன்று ஆலமரத்தில் தீப்பற்றி அதை அவ்வளவு லேசில் பக்தர்கள் விடவில்லை
மகரவிளக்கு நேரத்தில் எப்படியாவது பெண்களை சபரிமலைக்கு முன்னால் நிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கம்யூனிஸ்ட் அரசு செயல்பட்டு வந்த நிலையில் அரசுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகள் நூற்றுக்கணக்கான ஃபேஸ்புக் பக்கங்களை உருவாக்கி அவற்றில் கருத்துகளை எழுதி வருகின்றனர்