மதுரை வருகிறார் பிரதமர்… தகவல் சொன்ன தமிழிசை!

128
tamilisai 2 - 2026

சென்னை: பிரதமர் மோடி வரும் 27ஆம் தேதி மதுரை வர உள்ளதாக தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியவை…

பிரதமர் மோடி, வரும் 27 ஆம் தேதி மதுரை வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

மத்திய அரசு மூலம், தமிழகத்திற்கு பல திட்டங்கள் கிடைத்து வருகின்றன. பிரதமர் மோடியின் மதுரை வருகை மூலம், தமிழகத்திற்கு மேலும் பல திட்டங்கள் கிடைக்க உதவும்.

பிரதமர் மோடி வருகை தருவதல், இந்த மாநாடு, பெரிய மாநாடாகவும், கட்சியின் பிரசாரமாகவும் அமையும்.

மோடி, தொண்டர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. மோடியை சந்திக்க லட்சக்கணக்கான தொண்டர்களும் ஆர்வமாக உள்ளனர்.

மதுரை பயணத்தின் போது, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டல், தனுஷ்கோடி – ராமேஸ்வரம் இடையிலான ரயில் பாதை, மதுரை – சென்னை இடையிலான அதிவேக தேஜஸ் ரயில்சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைப்பார்

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.