மெட்ரோவில் இலவச பயணம்! நேற்று ஒரே நாளில் உச்சபட்ச அளவு!

Published:

03 Sep25 metro - 2026

சென்னை வண்ணாரப்பேட்டை- டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை கடந்த 10 ஆம் தேதி பிரதமர் மோடி காணொளிக் காட்சி முறையில் தொடங்கி வைத்தார்.

இதை அடுத்து பயணிகளின் வரவேற்பைப் பெறுவதற்காக, இந்தத் தடத்தில் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்ய ஓரிரு நாட்களுக்கு வாய்ப்பு வழங்கப் பட்டது. இந்நிலையில் இன்றும் இலவச பயணத்துக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதை அடுத்டு, சென்னையில் மெட்ரோ ரயிலில் நேற்று 2,10,792 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். ஒரே நாளில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தோர் எண்ணிக்கை இதுவே அதிகமாகும்.

கடந்த 3 நாட்களில் 4,12,348 பேர் மெட்ரோ ரயில் இலவச சேவையை பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Related articles

Recent articles

spot_img