மார்ச் முதல் கொல்லம் – சென்னை தினசரி எக்ஸ்ப்ரஸ் ரயில்!

Published:

thenmalai rail - 2026

வரும் மார்ச் முதல் தினசரி இயக்கப்படும் கொல்லம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறித்து ரயில்வே உறுதி செய்துள்ளது.

ரயில் எண் 16101 / 16102 தினமும் கொல்லத்தில் இருந்து சென்னை, சென்னையில் இருந்து கொல்லம் என இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கொல்லத்தில் இருந்து புனலூர், செங்கோட்டை, விருதுநகர், திருச்சி வழியாக வரும் மார்ச் மாதம் இந்த ரயில்கள் இயங்குவதற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில்கள் சென்னை எழும்பூர் பிரிவு பராமரிக்கும். மார்ச் மாதம் என்று தகவல் தெரிவித்தாலும், தேதி இன்னும் உறுதிசெய்யப் படவில்லை.

முன்னர் சென்னையில் இருந்து கொல்லத்துக்கு கொல்லம் மெயில் சேவை இருந்து வந்தது. பழைய எண்களாக 101/102 என இருந்தது. மிகப் பாரம்பரியமான ரயில் சேவையாக ‘கொய்லன் மெயில்’ திகழ்ந்தது. தற்போது அகலரயில் பாதையாக மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் சென்னை கொல்லம் மெயில் இப்போது எக்ஸ்ப்ரஸ்ஸாக உருவெடுத்திருப்பதாக பயணிகள் மகிழ்ச்சியுடன் தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img