தேடப்படும் குற்றவாளி மல்லையா! சொத்துகளை பறிமுதல் செய்யலாம்!

156
12 July09 Vijay Mallaya - 2026

தொழிலதிபர் விஜய் மல்லையா தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்யலாம் என்று கூறியுள்ளது நீதிமன்றம்.

வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று மல்லையா திரும்பச் செலுத்தாமல் லண்டனில் தலைமறைவாக உள்ளார். இவரை நாடு கடத்த கோரும் மனு லண்டன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வருமான வரித்துதுறையினர் சார்பில் மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், மல்லையாவை பொருளாதார குற்றம் புரிந்த தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. மேலும் இதன் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்யவும் முடியும் என்று கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.