இப்படி பண்றீங்களேம்மா.. ஒன்பீஸ்ஸில் மீராமிதுன்!

Published:

meera midhun - 2026

சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்ட மீரா மிதுன் என்கிற தமிழ்ச் செல்வி 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்ததாக மோசடி புகாரில் சிக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற அவர் அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும், சூர்யா, விஜய், திரிஷா உள்ளிட்ட பிரபலங்களை திட்டி அவர்களின் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். மேலும், சினிமா துறையே மோசம், அங்கு படுக்கைக்கு சம்பதிப்பவர்களுக்குத்தான் வாய்ப்பு என காட்டமாக கூறினர். சமீபத்தில், நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்றெல்லாம் மிரட்டிப் பார்த்தார். ஆனால், அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, ஆல்பங்களை தயாரிப்பது, ஆண் நண்பர்களுடன் நடனமாடுவது என பொழுதை கழுத்தி வருகிறார். அதோடு, தனது பயோபிக் படத்தில் நடித்து வருவதாக கூறி அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

இந்நிலையில், அப்படத்திற்காக மிகவும் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img