நட்சத்திர அந்தஸ்துடன் தமிழக பாஜக.,! நமீதா வகையறாக்கள் கைகொடுப்பார்கள்!

Published:

bjp leader murugan vp duraisamy

தமிழக பாஜகவில் சினிமா பிரபலங்கள்: பதவிகளை அள்ளி வழங்கியுள்ளது தலைமை!

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை மனத்தில் கொண்டு கட்சியை பலப்படுத்தும் வகையில், தமிழக பாஜகவில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக.,வில் இருந்து அண்மையில் தாவிய வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி கொடுக்கப் பட்டுள்ளது. சினிமா பிரபலங்களான நமீதா, கௌதமி, குட்டி பத்மினி, மதுவந்தி ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பாஜகவின் புதிய மாநில துணை தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பொருளாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய பட்டியலை தமிழக பாஜக இன்று வெளியிட்டது.

அதில் திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமி தமிழக மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி, உடனே சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்து அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவர் பாஜகவின் துணைத் தலைவர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

பாஜக., பொதுச் செயலாளராக இருந்த வானதி சீனிவாசனும் தமிழக பாஜக துணைத் தலைவராக, அக்கட்சியின் தலைவர் எல்.முருகனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் பாரதிய ஜனதாவில் இணைந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தமிழக பாஜகவின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் ராமசுப்பு (திருச்சி – ஆசிரியர்) தேசிய பொதுக்குழு உறுப்பினராக பதவி பெற்றுள்ளார்!

சினிமா பிரபலங்களான நமீதா, கௌதமி, குட்டி பத்மினி, மதுவந்தி சௌதாமினி ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகிகள் பட்டியல், தமிழக பாஜக.,வின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

Related articles

Recent articles

spot_img