சீனாவிற்கு கடத்த முயற்சித்த 21 லட்சம் மயில் இறகுகள் பறிமுதல்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
Peacock feather - 2026

தில்லி சுங்கத் துறை சீனாவிற்கு கடத்த கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 2,500 கிலோகிராம் எடையுள்ள 21 லட்சம் மயில் இறகுகளை பறிமுதல் செய்தது.

மயிலிறகுகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் களமிறங்கிய சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை அதிகப்படுத்தினர்.

இந்நிலையில் தில்லியில் உள்ள துக்ளகாபாத்தில் உள்ள உள்நாட்டு கண்டைனர் டிப்போவில் மயில் இறகுகள் கடந்த்தப்படுவது கண்டறியப்பட்டு அனைத்து மயிலிறகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தமாக 2,565 கிலோ எடையுள்ள இந்த கண்டைனர் பி.வி.சி குழாய்கள் என போலி ஆவணங்கள் மூலம் கடத்த திட்டமிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, பொருட்களைக் கைப்பற்றியது.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 உடன் தொடர்புடைய சுங்க சட்டம், 1962 இன் 113 (ஈ), இது போன்ற பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ட்விட்டரில் பதிவிட்ட சுங்கத் துறை, ‘ஐசிடி டி.கே.டி ஏற்றுமதி ஆணையர் ஒரு கன்டைனரைத் தடுத்து, சுமார் 2,565 கிலோகிராம் எடையுள்ள 21 லட்சம் மயில் வால் இறகுகளை பறிமுதல் செய்தார். சுங்கச் சட்டத்தின் 113 (ஈ) பொருட்கள் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.’ எனக் கூறியுள்ளது

‘அதிகாரிகள் ஒரு கன்டைனரைத் தடுத்து 21 லட்சம் மயில் வால் இறகுகளை பறிமுதல் செய்தனர். அவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சரக்கு பிவிசி குழாய்களை கொண்டிருப்பதாக ஆவணங்கள் போலியாக தயாரிக்கபப்ட்டுள்ளன.’ என்று ஒரு அதிகாரி ஊடகங்களிடம் கூறினார்.

மயில் வால் இறகுகள் கடத்தப்படுவது மருத்துவ நோக்கங்களுக்காக என்று சந்தேகிக்கப்படுகிறது என அந்த அதிகாரி மேலும் கூறினார். பறிமுதல் செய்யப்பட்ட மயில் வால் இறகுகளின் மதிப்பு சுமார் ரூ 5.25 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சரக்குகளை தில்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பதிவு செய்துள்ளது, அந்த அதிகாரி மேலும் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய மேலும் விசாரணை நடந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.