பேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணோடு நிர்வாண கால்! சபலத்தால் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

இலக்கியம் கிரைம் நியூஸ் சற்றுமுன்
abasa vedio 1 1
abasa vedio 1 1

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கே.ஆர்.புரம் வட்டாரத்தில் வசிக்கும் 26 வயதான எம்பிஏ பட்டதாரி இளைஞர் எந்நேரமும் பேஸ் புக்கில் பல நண்பர்களோடு அரட்டையடிப்பது வழக்கம்.

இந்நிலையில் திடீரென நேஹா என்ற ஒரு பெண் அவரோடு நட்பு கொண்டு பேசி வந்தார். அந்த பெண்ணின் அழகில் மயங்கிய அந்த இளைஞரும் அவரோடு அடிக்கடி பேசி வந்தார்.

இந்நிலையில் அந்த நேஹா அந்த இளைஞரிடம் நிர்வாணமாக வீடியோ காலில் வருமாறு கேட்டார். அவரின் ஆசை வார்த்தையில் மயங்கிய அந்த இளைஞர், அந்த பெண்ணின் பேச்சை நம்பி வீடியோ காலில் நிர்வாணமாக வந்தார். உடேன அந்த பெண் அந்த வீடியோ காலை ரெகார்ட் செய்தார்.

பின்னர் அந்த இளைஞரின் நிர்வாண வீடியோவை அவரிடம் காண்பித்து ,இதை சமூக ஊடகத்தில் வெளியிடாமலிருக்க பணம் தருமாறு மிரட்ட தொடங்கினார்.

cellphone speech - 2026

உடனே பயந்து போன அந்த இளைஞர் அந்த பெண்பணம் கேட்டதும் தன்னிடமிருந்த 36000 ரூபாய் பணத்தை அவரின் அக்கௌண்டுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அந்த பெண்ணும் அவரை சேர்ந்த கூட்டத்தினரும் மேலும் பணம் கேட்டு அவரை மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்து போன அந்த இளைஞர் மார்ச் 23ம் தேதியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதன் பிறகு அந்த நேஹாவும் அவரின் கூட்டத்தினரும் அந்த இளைஞர் இறந்தது தெரியாமல் அவரின் போன் நம்பருக்கு போன் செய்து பணம் கேட்டுயுள்ளனர். அப்போது போனை எடுத்த அந்த இளைஞரின் சகோதரி இதை கேட்டு ஷாக் அடைந்து . நேஹா மற்றும் அவரின் கூட்டத்தினரை பற்றி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் வழக்கு பதிந்து நேஹா மற்றும் அவரின் கூட்டத்தினரை கைது செய்ய தேடி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.