திருப்பதி பெருமாள் வேடம் புனைந்த நித்யானந்தா!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
nithiyanatha 2 - 2026

எங்கியிருக்கிறார் எனத் தெரியாத வகையில் ஒரு தீவினை விலைக்கு வாங்கி கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வாழ்த்து வருவதாக அப்பப்போ வீடியோ வெளியிட்டு வருகிறார் நித்தியானந்தா.

கைலாசாவிற்கு வர இலவச விசா, இலவசம் விமான டிக்கெட் என்று அறிவிப்புகளை வெளியிட்ட நித்தியானந்தா, மன்னர்கள் காலத்தில் இருந்த பொற்காசுகளை தனது நாட்டில் புழக்கத்தில் விட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

nithiyanatha - 2026

கைலாசாவின் இறையாண்மை, கல்விக்கொள்கை என்று அடிக்கடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நித்தியானந்தா, சிவன், கால பைரவர் போன்று வேடமணிந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

புதிய சர்ச்சையாக அவர் திருப்பதி ஏழுமலையான் போல் காட்சி அளித்து, ”பகவான் வெங்கடேஸ்வரரின் மங்களகரமன ஆசீர்வாதங்களையும் அருளையும் பெற்று உங்கள் நிதி நெருக்கடிகளில் இருந்து வெளிவாருங்கள். செல்வம் ஏராளமாக பெருகும்” என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

nithiyanatha 1 - 2026

வெங்கடாஜபலதி போன்று கடந்த 8ம் தேதி அவர் வெளியிட்டுள்ள வீடியோவும், புகைப்படங்களும் வைரலாகி பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பக்தர்கள் பலரும் இந்த புகைப்படங்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.