*நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை.*
*கறுப்பு பணம், ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.*
*தாமாக முன்வந்து எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்துள்ளார்கள்.*
*வங்கி முறையில் வராதவர்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.*
*20 கோடி பேருக்கும் அதிகமானவர்களுக்கு ரூபே கார்டு வழங்கப்பட்டுள்ளது.*
*26 கோடி பேருக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கித் தரப்பட்டுள்ளன.*
*சிறு தொழில் செய்பவர்களுக்கு நிதியுதவி செய்வதற்காக முத்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.*
*ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்காகவே அரசின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.*
*மத்திய அரசின் திட்டங்கள் மூலம் 3 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.*
*5 கோடி இல்லங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படுகின்றன.*
*இதுவரை மின்சாரவசதி இல்லாமல் இருந்த 11,000 கிராமங்களுக்கு மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.*
*விவசாயிகளின் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.*
*விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.*
*பருப்புகளின் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து அதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது.*
*ஒலிம்பிக்கில் ஜொலித்த பி.வி.சிந்து, சாக்சி மாலிக், தீபா கர்மாகர் மூலம் பெண்களின் திறமை வெளிப்பட்டது.*
*பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்கும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.*
*12 வாரங்களாக இருந்த பேறுகால விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தப்பட்டது.*
*வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுடன் கூடிய திட்டம் செயல்படுத்தப்பட்டது.*
*குறைந்தபட்ச கூலி வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் வங்கி முறை மூலம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.*
*ஸ்டாண்ட்அப் இந்தியா திட்டத்தின் மூலம் தலித், பழங்குடியின தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை.*
*பழங்குடியினர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.*
*மாற்றுத் திறனாளிகளுக்கும் சமவாய்ப்புகளை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது.*
*சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கே அரசு பணியாற்றி வருகிறது.*
*ஏழைகள், நலிந்த பிரிவினருக்காகவே அரசு திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது.*



