நெல்லையப்பர் கோயிலைப் பூட்டிவிட்டு பிரதோஷ பூஜை.. என்ன அவலம் இது?!

அடடே... அப்படியா? நெல்லை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
nellaiappar koil
nellaiappar koil

நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் திருக்கோவிலை பூட்டிவிட்டு பிரதோஷ பூஜை நடத்தும் அவலம் இன்று! வாசலில் நிற்கும் ஒருசில பக்தர்களை கூட அனுமதிக்க திருக்கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது!

பல ஏக்கர் கணக்கு பரப்பளவில் உள்ள மிகப்பெரிய நெல்லையப்பர் கோவிலில் தூணுக்கு ஒருவர் நின்றால் கூட சமூக இடைவெளி காக்கப்படுமே! இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் வாசலையே பூட்டி வைத்தால் என்ன அர்த்தம்?

பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு சாமி கும்பிட வருவதுதானே இந்துக்களின் மரபு! அந்த நேரம் முடிந்து வாருங்கள் என்று சொன்னால் அது என்ன மடத்தனம்?!

திருக்கோவிலை பூட்டச் சொல்லி யார் உத்தரவிட்டார்கள்? மாவட்ட ஆட்சியர் சொன்னதாக கோவில் பணியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

நாளை ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுகளிலும் தினந்தோறும் ரமலான் நோன்பு இருக்கும் பள்ளிவாசலிலும் நோன்பு திறக்கும் நோன்பு துறக்கும் நேரங்களில் பள்ளிவாசலை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியருக்கு வல்லமை இருக்கிறதா?!

இந்துக்களுக்கு ஒரு சட்டம்! முஸ்லிம்களுக்கு ஒரு சட்டமா? தமிழக அரசே கொரோனோ கட்டுப்பாட்டில் மத ரீதியாக பாரபட்சம் காட்டாதே!

  • கா.குற்றாலநாதன்
    மாநிலச் செயலாளர், இந்து முன்னணி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.