
கருப்பு கொண்டைக்கடலை
தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டைக்கடலை – 1 பெரிய கப்,
துருவிய தேங்காய் -1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.
வறுத்து கரகரப்பாக அரைக்க:
தனியா – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 4,
உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன்.
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
பெருங்காயம், கறிவேப்பிலை – தேவைக்கு.
செய்முறை:

கருப்புக் கொண்டைக்கடலையை முந்தைய நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் உப்பு போட்டு வேக வைத்து வடிக்கவும். வறுக்க கொடுத்ததை வெறும் கடாயில் வறுத்து கரகரப்பாக பொடிக்கவும்.
கொண்டைக்கடலையில் வறுத்த பொடியை சேர்த்து குலுக்கி, தேங்காய்த்துருவலை சேர்த்து கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க கொடுத்ததை தாளித்து சுண்டலில் கொட்டி கலந்து சூடாக படைத்து பரிமாறவும்.



