மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம்! ஆன்லைனில் தரிசித்த பக்தர்கள்!

Published:

meenakshi kalyanam1
meenakshi kalyanam1

மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு இன்று கோலாகலமாக திருக்கல்யாண ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று காலையில் நடைபெற்றது.

இந்த திருவிழா ஏப்ரல் 15 கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 26 வரை கொரோனா பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் குறிப்பிட்ட நேரம் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். இன்று 8 45 மணி முதல் 8 50 மணிக்குள் திருக்கல்யாணம் நடந்தது. இதில் குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

meenakshi kalyanam2
meenakshi kalyanam2

திருக்கல்யாணத்தை www.maduraimeenakshi.org என்ற தளத்தில், யுடியூப் மூலம் காணலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.. அதன் பேரில் யூடியூப் மூலம் ஒளிபரப்பப்பட்டது.

திருக்கல்யாண அலங்காரத்தில் அம்மன் சுவாமி பழைய திருக்கல்யாண மண்டபத்தில் காலை ஒன்பது முப்பது மணி முதல் மதியம் 2 30 மணி வரை இருக்கலாம் என்றும் பக்தர்கள் வழக்கம்போல் 15:30 முதல் மாலை 5.30 வரையும் இரவு 7.30 முதல் 9 மணி வரையும் அனுமதிக்கப்படுவர்

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!
meenakshi kalyanam3
meenakshi kalyanam3

நாளை சட்டத் தேர் நடைபெறுகிறது. நாளை பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது ஆண்டாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று (ஏப்.,24) காலை திருக்கோவில் நிர்வாக இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப் பட்டது. பலரும் திருக்கல்யாணத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

meenakshi kalyanam4
meenakshi kalyanam4

அலங்காரத்தில் அம்மன், சுவாமியை பழைய திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை பக்தர்கள் தரிசித்தனர்.

meenakshi kalyanam5
meenakshi kalyanam5

ஸ்வாமி தரிசன நேரம் குறித்து திருக்கோயில் நிர்வாகம் முன்னதாக வெளியிட்டிருந்த தகவல்…

இன்று பக்தர்கள் வழக்கம்போல் மதியம் 3:30 – மாலை 5:30 மணி, இரவு 7:30 – 9:00 மணி வரை அனுமதிக்கப்படுவர். நாளை சட்டத்தேரன்று காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, மாலை 4:00 – 5:30 மணி, இரவு 7:30 – 9:00 மணி வரையும், ஏப்., 26 காலை 7:00 – 10:30 மணி, மாலை 4:00 – 5:30 மணி, இரவு 7:30 மணி – 9:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
meenakshi kalyanam6
meenakshi kalyanam6

Related articles

Recent articles

spot_img