உடல் எடைக் குறைக்கும் காசினி கீரை!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
kasini
kasini

காணாம்கோழிக் கீரை என்ற பெயர்தான் மருவி காசினி கீரை ஆனது. இது புளிச்ச கீரை வகையை சேர்ந்த கீரையாகும். காசினிக்கீரையின் தாவரவியல் பெயர் ‘சிக்கோரியம் இன்டிபஸ்’ [Chicorium intybus] என்பதாகும். காபி பொடியில் கலப்பார்களே ‘சிக்கரி’, அது இந்த செடியில் இருந்து தான் எடுக்கப்படுகிறது.

காசினிக்கீரையில் கொம்புக் காசினி, சீமைக் காசினி, சிக்கரி ரகங்களான வேர்காசினி, சாலடு காசினி ஆகிய இரகங்கள் உள்ளன.

காசினி பலவகைப்பட்ட மண் வகைகளிலும் வளரும் தன்மையுடையது. செம்மண்ணில் நன்கு வளரும் தன்மை உடையது.

இது நல்ல ருசியுள்ள கீரை உடலுக்கு பலத்தை கொடுக்கும் கீரை. இக்கீரை தேக உஷ்ணத்தை சமன்படுத்தக் கூடிய சக்தியைக் கொண்டது.

மூலிகை வைத்தியத்தில் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இக்கீரையைப் பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

சிலருக்கு புண் ஏற்பட்டு விட்டால், அவ்வளவு சீக்கிரம் ஆறவே ஆறாது. அவர்கள் இக்கீரையை மைபோல அரைத்து புண்ணின் மேல் கனமாக வைத்து கட்டிவந்தால் ஒரு வாரத்தில் ஒன்றாகிவிடும்.

இந்த கீரையில் உள்ள நன்மைகள்

காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவைகள் உள்ளன. ஜீரண கோளாறு, பித்தப்பை நோய், கல்லீரல் நோய்கள், இரத்த சோகை, சிறுநீரக நோய்கள், இருதய நோய்கள், வாத நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை உடையது.

உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது காசினிக் கீரை.

காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவதுடன் உடலை சீராக வைக்க உதவும்.

மேலும் இந்தக் கீரையை நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

kasini keerai
kasini keerai

இதன் வேர் காய்ச்சலை குணமாக்கும் சக்தி கொண்டது.

இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்தத்தை விருத்தி செய்யும் மூலச்சுட்டை தணிக்கும். உயிர்ச்சத்துக்கள் கொண்டது. எனவே உடலுக்கு நல்லதைச் செய்யும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை ஒழுக்கு பெரும்பாடு நோய்களை குணமாக்கும்.

பற்களுக்கு உறுதியையும், பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும்.

இக்கீரையை வாரத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ, பாசிப்பருப்புடன் கலந்து சாப்பிட்டு வருவது உடல் நலத்திற்கு பயன் தரும்.

காசினிக் கீரையை பொடி செய்து, தினமும் காலை வேளையில் ஒரு குவளை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். மேலும் உடல் சூடு தணியும்.

காசினிக்கீரையை கடைந்து மதிய உணவில் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு குறையும்.

காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் வேகவைத்து கடைந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தாதுவை விருத்தி செய்யும் குணம் காசினிக் கீரைக்கு உண்டு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.