ஜாடிக்கேத்த மூடி: யூடியூப் மதன் மனைவி கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை தமிழகம் தொழில்நுட்பம்
utube madhan
utube madhan

யூடியூபில் டாக்சிக் மதன், மதன் ஓபி, மதன் 18 ப்ளஸ் என்ற பெயரில் சேனல் நடத்தி, அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜியை வி.பி.என் என்ற முறை மூலமாக பதிவிறக்கம் செய்து, சிறார்கள் மற்றும் சிறுமிகள் இடையே ஆபாசமாக உரையாற்றி வந்த சர்ச்சையில் சிக்கியவன் மதன்.

இவனை பெரும் புள்ளியை போல அடையப்படுத்தி அவனது சேனலுக்கு அவார்ட் கொடுத்து கவுரவம் செய்தது பிளாக் சீப் என்ற கருப்பு கூட்டம்.

இந்த கூட்டத்தினால் வளர்ந்து வந்த மதன், தனக்கு மட்டும் தான் வாய் இருக்கிறது என்ற எண்ணத்தில், இவனது வீட்டில் இப்படித்தான் பெண்களை கொச்சையாக பேசுவார்கள் என்பதை போல பெண்களை இழிவுபடுத்தி விமர்சனம் செய்து வந்தான்.

இந்த விஷயம் தொடர்பாக அடுத்தடுத்து எழுந்த புகாரிகளின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவே, ஓபி மதன் கோழை மதனாக மாறி தலைமறைவானான்.

kirthika madhan
kirthika madhan

இந்நிலையில், மதனின் யூடியூப் சேனலுக்கு அட்மினாக செயல்பட்டு வந்த மதனின் மனைவி கிருத்திகாவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலத்தில் இருந்து கிருத்திகாவை சென்னைக்கு அழைத்து வந்த காவல் துறையினர், சென்னையில் விசாரணை மேற்கொண்டு கைது செய்துள்ளனர்.

மேலும், கணவன் – மனைவியும் இணைந்தே யூடியூபில் சிறார்களை கெடுக்கும் ரீதியில் குற்றங்களை செய்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.

இவர்களுக்கு எட்டு மாதமே ஆகும் பச்சிளம் குழந்தை உள்ள நிலையில், கிருத்திகா கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் மதனும் கைது செய்யப்படுவான் என எதிர்பார்க்கபடுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.