Dhinasari Home page

காரைக்கால் நாகை மீனவர்கள் 22பேர் இலங்கையில் கைது:

சற்றுமுன்

இலங்கை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக காரைக்கால் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம்  பகுதியை சேர்ந்த சிவா (34) வுக்கு சொந்தமான விசைப் படகில்,  கீச்சாங்குப்பத்தை சேர்ந்த   9 பேர் நாகை துறைமுகத்தில் இருந்து   மீன்பிடிக்கக் கடலுக்கு சென்றனர். இவர்கள் புதன்கிழமை மாலை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி கச்சத்தீவு வந்து இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக, 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு,  மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

பின்னர்,  அவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, யாழ்பாணம் சிறையில் அடைக்கப்படைக்கப்பட்டனர்.

இதேபோல காரைக்கால் துறைமுகத்தில் இருந்து சென்ற 13 மீனவர்களை  இலங்கை கடற்படையினர் புதன்கிழமை இரவு கைது செய்து மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று வாரங்களில் 72 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதில் 21 மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து மீனவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.