shaman mithra
shaman mithra

கொரோனாவுக்கு பிரபல தமிழ்ப்பட நடிகர் ஷமன் மித்ரு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனா முதல் அலையில் ஏராளமான நபர்கள் இறந்த நிலையில், இரண்டாவது அலை தீவிரமாக இருந்தது . தற்போது ஊரடங்கு காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக இரண்டாவது அலை குறைந்து வருகிறது.

இதுவரை பல திரைப்பிரபலங்கள் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், நடிகர் மாறன், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ், நடிகர் பாண்டு என கொரோனாவால் பல பிரபலங்கள் இறந்துள்ளனர்.

சமீபத்தில் காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இந்நிலையில் தொரட்டி திரைப்பட கதாநாயகன் ஷமன் மித்ரு கொரோனா பாதிப்பால் சென்னையில் உயிரிழந்தார்.

சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி ஷமன் மித்ரு உயிரிழந்தார்.

ஷமன் மித்ரு மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஷமன் மித்ரு மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending