பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
Bharathi bhaskar
Bharathi bhaskar

பட்டிமன்றங்களின் மூலம் உலகத் தமிழர்களிடையே புகழ்பெற்றவர் பாரதி பாஸ்கர். கெமிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் எம்பிஏ படித்திருக்கும் இவர் உலகின் முன்னணி தனியார் வங்கியில் மிகப்பெரிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

வங்கிப் பணிகளுக்கிடையே சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து தொடர்ந்து பேசிவந்தார் பாரதி பாஸ்கர். பாரதி பாஸ்கர் – ராஜா இருவரின் பேச்சுக்குதான் அதிக பாராட்டுகள் கிடைக்கும். பாரதி பாஸ்கர் கொடுக்கும் ஒவ்வொரு கவுன்ட்டரும் அவ்வளவு ரசிக்க வைக்கும்.

இந்நிலையில் பாரதி பாஸ்கருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அவர் நேற்று மாலை, சென்னையில் உள்ள கிருஷ்ணகான சபாவில், கல்யாணமாலை நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இதை அடுத்து அவரை உடனே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் வருகின்றன.

பாரதி பாஸ்கர் விரைவில் நலம்பெற்று மீண்டு வருவார் என்கிறார்கள் அவரது நண்பர்கள். இதனிடையே அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகவும், அவர் ஐசியு பிரிவில் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரது நட்பு வட்டங்கள் தெரிவித்தன .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.