ரெட்மி 10 பிரைம்: விலையும் அம்சங்களும்..!

அடடே... அப்படியா? சற்றுமுன் தொழில்நுட்பம் வணிகம்
redmi premi
redmi premi

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகம் .

மேலும் இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது
வெளிவந்த தகவலின்படி, 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் இந்த சாதனம் அதிக எதிர்பார்புகளை உருவாக்கியுள்ளது.

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்
அதாவது இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.10,000 அல்லது 11,000-விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் தனித்துவமான வடிவமைப்பு, தரமான சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எஃப்எச்டி பிளஸ் Dot டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய டிஸ்பிளே என்பதால் இதை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அம்சங்களுடன் ரெட்மி 10 பிரைம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி
இந்த புதிய சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் ரெட்மி 10 பிரைம். குறிப்பாக இரவு நேரங்களில் கூட இந்த சாதனத்தின் கேமராக்கள் உதவியுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

ரெட்மி 10 பிரைம் சாதனத்தில் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும். எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு அருமையாக இருக்கும்.

இப்போது வெளிவந்த தகவலின்படி, ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட தரமான அம்சங்களுடன் வெளிவரும்.

மேலும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.