அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! புருவ முடி, புற்றுநோய், புழுவெட்டு, பூனைக்கடி!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips 1
health tips 1

புட்டாளம்மைக்கு…

ஒரு குழந்தைக்கு புட்டாளம்மை வந்தால் மற்ற குழந்தைகளுக்கும் வந்து விடும். கூடிய மட்டும் அக்குழந்தையை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விடாமல் தனித்து வைக்க வேண்டும். வேப்பங்கொழுந் தையும் மஞ்சளையும் சமமாக எடுத்து அரைத்துப் பூச வேண்டும். பூண்டைக் கஷாயம் வைத்து தொண்டையில் படும்படியாக நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை வாய் கொப்பளித்து வந்தால் சீக்கிரம் குணமாகும்.

புருவ முடிகள் உதிர்கின்றனவா?

நாள்தோறும் காலையில் பசு வெண்ணெய் சாப்பிட்டு இரவு பசும்பால் குடித்து வர சில வாரங்களில் முடி முதிர்வது நின்றுவிடும்.

புற்று நோய்க்கு…

வெளியில் தெரியும்படியான புற்றுநோய் இருந்தால் முருங்கை இலையையும் தேங்காய்த் துருவலையும் வதக்கி மெல்லிய துணியில் முடிந்து புற்று கண்டுள்ள இடத்தில் இளஞ்சூட்டுடன் ஒற்றடம் கொடுத்து வரவும். ஏழு வாரங்களில் புற்று நோய் அகலும்.

புழுவெட்டு குணமாக…

சிலருக்குத் தலையில் புழுவெட்டு ஏற்பட்டு அந்த இடத்தில் முடி வளராமல் அசிங்கமாக இருக்கும். சுத்தமான தேளில் வெள்ளைப் பூண்டை அரைத்தக் குழைத்து அந்த இடத்தில் தடவி வர புழுவெட்டு குணமாகி முடி வளரத் தொடங்கி விடும்.

பிஞ்சு ஊமத்தைக் காயை நசுக்கி அதில் உமிழ்நீரை சேர்த்து அரைத்து முடி விழுந்து சொட்டையாக உள்ள இடத்தில் தடவி வர முடி வளர ஆரம்பிக்கும்.

பூனைக்கடிக்கு…

குப்பைமேனிச் செடியின் பட்டையை உரித்து பசும் பால் விட்டு நன்றாக அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு காலை மாலை சாப்பிட்டு வர பூனைக் கடியின் விஷம் அகன்று விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.