பூசணி குடல் தோசை
தேவையானவை:
வெள்ளைப் பூசணியின் நடுவில் இருக்கும் பஞ்சு போன்ற பகுதி (விதைகளை நீக்கிவிடவும்) – அரை கப்,
பச்சரிசி, புழுங்கலரிசி – தலா அரை கப், உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 50 கிராம்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசி, புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை கழுவி, ஒன்றாக 4 மணி நேரம் ஊறவிடவும் பிறகு அதனுடன் உப்பு, பூசணியின் பஞ்சு போன்ற பகுதி, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து கிரைண்டரில் பொங்கப் பொங்க அரைத்து, 2 மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக் கல்லை சூடாக்கி, மாவை தோசையாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
இந்த தோசை… உப்பு, காரம், புளிப்பு என அமர்க்களமான சுவையில் இருக்கும்.