health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: விக்கல், கழுத்துக்கருப்பு, தாது விருத்தி, புற்றுநோய்..!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

தொடர்ந்த விக்கல் சரியாக…

ஒரு வில்லை நவச்சாரத்தை நசுக்கி அத்துடன் சுண்ணாம்பு கலந்தால் நெடி ஏற்படும். இந்த நெடியை விக்கல் வந்தவர்கள் முகர்ந்தால் விக்கல் உடனே நின்று விடும்.

தாது விருத்திக்கு…

புளிச்சக்கீரையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து கடைந்து சாதத்துடன் சேர்த்து நெய் விட்டுப் பிசைந்து சில நாள்கள் சாப்பிட்டு வர தாதுவிருத்தி ஏற்படும்.

உயரமாக வளர வேண்டுமா?

20, 25 வயது உள்ளவர்களுக்குத் தான் இது பலிக்கும். அத்திப்பழம். பேரீச்சம்பழம், பப்பாளிப் பழம் சாப்பிட வேண்டும். வெண்டைக்காய், தக்காளி, முருங்கை, பூசணி இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

உளுந்து, கேழ்வரகு களி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சிகளும் செய்து வந்தால் சற்று உயரமாக வளரலாம்.

புற்றுநோயைத் தவிர்க்க…

காய்கறி உணவு வகைகளை உண்ணுகிறவர்களுக்கு மலக்குடல் புற்றும் குதப்புற்று நோயும் வருவதில்லை.

கழுத்துப்பட்டை கறுப்பாயிருக்கிறதா?

சிறிது பாலில் ஒரு ஸ்பூன் தேனைக் கலக்கி அதில் ஓர் எலுமிச்சம் பழத்தை வெட்டி ஒரு பகுதியில் தேய்த்து எடுத்துக் கழுத்தில் தினமும் 10 நிமிட நேரம் தேய்த்து பிறகு வெந்நீரில் கழுவி விடவேண்டும். சில நாள்களில் கழுத்து நிறம் மாறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.